மிரட்டும் கரும்துளை- 2

 



புதன் கிரகம் சூரியனை சுற்றும் பாதை தொடர்பாக நியூட்டனின் விதிகளுக்கு அமையகணித்த பெறுமானமும் ஐன்ஸ்டீன் தியரியூடாகக்கணித்தபெறுமானமும் வேறுபட்டதை விஞ்ஞானிகள் அவதானித்தார்கள்.சூரியனைச்சுற்றும் புதனின் சுற்றுவட்டப்பாதையும் மாறிக்கொண்டிருந்தது.

அமைதியாக இருக்கும் நீரில் நீர்த்துளி விழும்போது அலைகள் தோன்றுவதுபோல் spacetime இல் திணிவுகள் அசையும்போது ஈர்ப்பு அலைகள்(Gravitational waves) தோன்றும் என ஐன்ஸ்டீன் கூறினார்.LIGO (Laser Interferometer Gravitational-Wave Observatory) வை சேர்ந்த விஞ்ஞானிகள் 2016இல் ஒரு கருந்துளையில் இந்த ஈர்ப்பலைகளை அவதானித்தார்கள்

ஐன்ஸ்டீன் இன்னொரு விடயத்தையும் கூறினார் 

spacetime இனூடாக பிரயாணம் செய்யும் ஒருவரின் நேரம்,பிரயாணம் செய்யாது நிற்கும் ஒருவரின் நேரத்தைவிட குறைவானவேகத்தில் இயங்கும் அதோடு பிரயாணம் செய்யும் பொருள் அதன் ஆரம்பத்தில் இருந்த அளவை விட சுருங்கும் என்றும் குறிப்பிட்டார் இதை"time dilation length contraction" என்று கூறினார்.

ஐன்ஸ்டீனின் special relativity theory க்கு செல்வதற்கு முன்னால் டொப்லர் இபக்ட்  (doppler effect) என்றால் என்ன என்று பார்த்துவிடுவோம்.

உங்களை நோக்கி ஒரு போலீஸ்கார் வரும்போதும் அது உங்களைக்கடந்து செல்லும் போதும் ஏற்படும் ஒலிவேறுபாட்டை அவதானித்திருக்கின்றீர்களா?இந்த விளைவைத்தான் டொப்லர் இபெக்ட் என்பார்கள்.

எந்த ஒலி எழுப்பும் சாதனமும் உங்களை நோக்கிவருமேயானால் உங்களை நோக்கிவரும் ஒலியின் அலை நீளம் குறைந்திருக்கும்.உங்களைக்கடந்து சென்றதும் ஒலியின் அலை நீளம் அதிகரித்திருக்கும்.

உங்களை நோக்கி ஒரு ஒலி எழுப்பும் சாதனம் வருமானால் அது செல்லும் திசையில் அது வெளிப்படுத்தும் ஒலி அலை நெருக்குதலுக்குள்ளாகும் இதை கீழே அவதானியுங்கள்

மேலே காட்டிய படங்களில் காட்டப்பட்ட 2 நிலைகளிலும் நீங்கள் வாகனம் உங்களை நோக்கிவருமாக இருந்தால்.நெருக்கலடைந்த அலை நீள ஒலியே உங்களை வந்தடையும்.உங்களை தாண்டிய பின் விரிவடைந்த ஒலி உங்கள் காதை அடையும்.அலைகள் நெருக்கப்படும் போது சத்தத்தை நீங்கள் கேட்டால்(அதாவது வாகனம் உங்களை நோக்கி வரும்போது சத்தத்தைக்கேட்டால்) உங்களுக்கு சத்தம் ஹைபிச்சில் கேட்கும்.

தாண்டியபின் அலை நீளம் விரிவடைவதால்(அல்லது அதிகரிப்பதால்) லோ பிச்சில் சத்தம் கேட்கும்.

இவ்வளவு நேரம் கூறியவற்றில் நோக்கிவரும்போது சத்தம் ஹை பிச்சில் கேட்கிறது.அலை நீளம் குறைகிறது.விலத்தி செல்லும்போது அலை நீளம் அதிகரிக்கின்றது லோ பிச்சில் கேட்கின்றது.என்பவைகள் மட்டும் விளங்கினாலே போதும்.


special relativity theory

ஐன்ஸ்டீன் இத்தியரிகளை வெளியிடுவதற்கு முன்னர் ஒளியின் வேகம் மாற்றமடையக்கூடியது என விஞ்ஞானிகள் நம்பினார்கள்.டொப்லர் இபக்டினால் ஒளியின் வேகம் பாதிப்படையும் என நம்பினார்கள்.இதை அவர்கள் பரிசோதனைசெய்துபார்க்க முனைந்தார்கள்.பூமியில் இருந்து நட்சத்திரம் ஒன்றை அவதானித்து அதற்கு டொப்லரின் சமன்பாடுகளைப்பயன்படுத்தும்போது ஒளியின் வேகம் மாறவில்லை அதன் அலை நீளத்திலேயே மாற்றம் ஏற்பட்டது.ஐன்ஸ்டீன் கூறியிருந்தார் வெற்றிடத்தில் ஒளியின்வேகம் மாறாது.

பூமியானது வானில் பிரயாணித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு கணத்திலும் பூமியினதும் பூமியில் உள்ள சகலவற்றினதும் அளக்கும்பெறுமானங்கள் மாறிக்கொண்டே இருக்கும்.அதாவது அவற்றின் நீள,அகல,உயரம், நேரம் என்பவை ஆனால் இது சடுதியாகவும் நடைபெறலாம் அல்லது நேரம் எடுக்கலாம்.இதை எம்மால் உணரமுடியாது ஏனென்றால் எம்முடன் எம்மை சுற்றியுள்ள அனைத்தும் மாறிக்கொண்டிருக்கும்.ஒன்றே ஒன்று மட்டும் மாறாது அதுதான் ஒளியின் வேகம்.இவ்வாறு நீள,அகல,உயரங்கள் மாற்றமடையும்போது மாறாத ஒன்றான ஒளியைவைத்து இந்த மாற்றங்களை கணிக்கமுடியும்.இதற்காக light clock ஐ பயன்படுத்தமுடியும் என்று ஐன்ஸ்டீன் கூறினார்.

இதுதான் time dilation length contraction இதை விளங்குவதற்கு முன்னர் சார்புவேகம் என்றால் என்ன என்றுவிளங்கவேண்டும்.

நாம் ஒரு காரில் மணிக்கு 100கிலோமீட்டர் வேகத்தில் சென்றுகொண்டிருக்கும்போது முன்னால் ஒரு கரண்ட் கம்பத்தை பார்க்கின்றோம் அதைக்கடந்துசெல்லும்போது காரின் உள்ளே இருக்கும் எமக்கு கரண்ட் கம்பம் வீதியில் ஓடுவதுபோல் தோன்றும்.உண்மையில் கரண்ட் கம்பம் ஓடாது இது அனைவருக்கும் தெரிந்தவிடயம்.ஆனால் காரில் இருக்கும் எமக்கு அப்படி ஒரு தோற்றுவாய் ஏற்படுகின்றது.விடயம் என்னவென்றால் அந்த கரண்ட்கம்பம் நாம் பிரயாணம் செய்யும் காரின் வேகத்திலேயே ஓடுவதுபோல் தோன்றும் அதாவது மணிக்கு 100 கிலோமீட்டர்.இதுதான் சார்புவேகம்.

இப்போது வீதியில் ஒரு கார் பழுதடைந்து நிற்கின்றது அதே 100கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்போது மரத்துக்கு நடந்த அதேவிடயம் நடக்கும் ஆனால் பழுதடைந்த கார் திருத்தப்பட்டு அந்தக்கார் எம்மை நோக்கி மணித்தியாலத்திற்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துகொண்டிருந்தால் காரில் இருக்கும் எமக்கு வந்துகொண்டிருக்கும் காரின் வேகம் எவளவாகத்தெரியும்?(எம்மை நோக்கிவருவதால் வரும் காரின்வேகத்தை எமதுவேகத்துடன் கூட்டவேண்டும் 100+10=110km/hr) மணித்தியாலத்திற்கு 110 கிலோமீட்டர்,

இதுவே பழுதடைந்த கார் மறுபுறம் செல்கின்றது அதாவது எம்மை விலத்தி செல்கின்றது அதே 10 கிலோமீட்டர்/மணித்தியாலம் வேகத்தில் ,இப்போது எமக்கு அந்த காரின் வேகம் எவளவாகத்தெரியும் 90கிலோமீட்டர்/மணித்தியாலங்கள்(எம்மை விலத்தி செல்லும்போது விலத்தி செல்லும் காரின்வேகத்தை எமதுவேகத்தில் இருந்து கழிக்கவேண்டும் 100-10=90kim/hr)

நாம் பிரயாணிக்கும்போது பிரயாணம்செய்யாமல் நிலையாக நிற்கும் ஒருவரர் எம்மைப்பார்க்கும் பார்வைக்கும் நாம் பிரயாணம்செய்யும்போது அவரை பார்க்கும்பார்வைக்கும் இருக்கும் வித்தியாசத்திற்கான பௌதிக கணித விதிகள்தான் இவை.இவை எந்தபொருட்களுக்கும் பொருந்தும் ஓடுவது மனிதன்,நாய்,கார்,சந்திரன்,சூரியன் ஆனால் ஒன்றுக்கு மட்டும்பொருந்தாது அதுதான் ஒளி.

இப்படியோசித்துப்பாருங்கள் ஒளியின் வேகம் 299 792 458 m / s, ஒரு டோச் லைட்டை நோக்கி நாம் 50m/sec வேகத்தில் சென்றுகொண்டிருந்தால் எமக்கு ஒளியின்வேகம் எவளவாக தெரியவேண்டும் 299 792 458 m / s+50m/sec ஆனால் இப்படி நடைபெறாது ஒளியின்வேகம் மாறாது.ஆனால் இதற்கு ஏற்றாற்போல் நம் கார் பிரயாணம் செய்யும் வீதி நீண்டுவிடும்.ஆனால் இவையெல்லம் 50மீட்டர்/செக்கன் வேகத்தில் செல்லும்போது அவதானிக்கமுடியாது.ஒளியின்வேகத்தின் அரைவாசியிலோ அல்லது அதை ஒத்த பெறுமானங்களில் செல்லும் மிகப்பெரியவேகத்தில்தான் இவற்றை உணரமுடியும். இதுதான் length contraction நீளம் சுருங்கலாம் அல்லது விரியலாம் ஆனால் ஒளியின்வேகம் மாறாது.இதொன்றும் தியரி அல்ல lorentz equation ஐவைத்து உண்மை என நிரூபித்தாகிவிட்டது.இவையனைத்திற்கும் கணித ரீதியான நிரூபணங்கள் உள்ளன.

time dilation
சாதாரணமாகக்கூறினால் ஒருவர் வீதியில் நிற்க வேறுஒருவர் வேகமாக காரில் சென்றுகொண்டிருக்கின்றார்,இருவரும் கையில் மணிக்கூடு அணிந்திருக்கின்றார்கள்.காரில் செல்பவர்  அணிந்திருக்கும் கடிகாரம் வீதியில் நிற்பவரின் கடிகாரத்தை விட சற்று மெதுவாக ஓடும்.இப்படி கடிகாரம் மெதுவாக ஓடுவது வேகத்தாலும் ஈர்ப்புவிசையாலும் பாதிக்கப்படும்.உண்மையில் இவ்வாறான நேர வித்தியாசத்திற்கு மிகப்பெரும் வேகங்களும்,ஈர்ப்புவிசைகளும் தேவை.இதை பரிசோதனைமூலம் கண்டறிந்திருக்கின்றார்கள்.ஜெட்விமானத்தை பூமியை சிற்றி பறக்கசெய்து விமானி அவதானிக்கும் நேரத்திற்கும் பூமியில் இருப்பவர் அவதானிக்கும் நேரத்திற்குமிடையில் சிறிய வித்தியாசம் இருப்பது உணரப்பட்டுள்ளது.
இதை வாசிக்கும்போது கிரிஸ்றோபர் நோலனின் intrasteller படம் நினைவுக்கு வரவேண்டும்.

கருந்துளையின் படம்

வரலாற்றில் முதன்முறையாக கருந்துளையின் படம் விஞ்ஞானிகளுக்கு கிடைத்துள்ளது.
M87 என்ற கலக்ஸியினுடைய மையத்தில் இருக்கும் super massive கருந்துளையையே விஞ்ஞானிகள் படம்பிடித்துள்ளார்கள்.

இந்த கருந்துளையின் சில சிறப்பம்சங்களைப்பார்ப்போம்
இக்கருந்துளையின் நிறை எம் சூரியனின் நிறையைவிட 6.5 பில்லியன் மடங்குகள் பெரியதாகும் அதோடு சூரியனைவிட அளவில் 17 மடங்கு பெரியது ஆனால் இவையனைத்தும் கருந்துளையின் மையத்தில் ஒரு புள்ளியில் அடங்கிவிடும் அந்தப்புள்ளி முடிவிலியாக இருக்கும் என ஐன்ஸ்டீன் கூறுகிறார்.இவ்வாறு மாறும் கருந்துளையின் மையம் singularity என்று அழைக்கப்படுகின்றது.

இந்த கருந்துளை எமது பூமியைவிட 3 மில்லியன் மடங்கு பெரிய உருவத்தைக்கொண்டது அதோடு பூமியில் இருந்து 500மில்லியன் பில்லியன் கிலோமீட்டர் தூரங்களுக்கு அப்பால் அமைந்துள்ளது.
இந்தக்கருந்துளையைப்படம் பிடிப்பதற்கு EHT(Event Horizon Telescope) என்ற தொலைகாட்டியை விஞ்ஞானிகள் குழு பயன்படுத்தியுள்ளது.உண்மையில் விஞ்ஞானிகளுக்கு கிடைத்தது 50 மில்லியன் வருடங்களுக்கு முன்னைய கருந்துளையின் படமேயாகும்.

M87 இன் கருந்துளையை படம்பிடிக்கவேண்டுமென்றால் பூமியின் அளவை ஒத்த மிகப்பெரிய தொலைகாட்டி ஒன்று அவசியம் என்று விஞ்ஞானிகள் அறிந்துகொண்டார்கள் ,ஆனால் அவ்வாறு ஒரு தொலைகாட்டியை உருவாக்குவது நடைமுறைக்கு சாத்தியமானதல்ல எனவே உலகின் வெவ்வேறு பிரதேசங்களில் 8 தொலைகாட்டிகளை நிறுவி அதன் மூலம் பூமியின் அளவை ஒத்த virtual தொலை நோக்கியை விஞ்ஞானிகள் உருவாக்கினார்கள்.

EHT  என்ற இந்த தொலைகாட்டி நாம் சாதாரணமாக குவிவாடி,குழிவாடிகளைக்கொண்டு பயன்படுத்தும் தொலை நோக்கியல்ல.
மின் காந்த அலைகளை மட்டுமே உணரக்கூடிய தொலை காட்டியாகும்.

இவ்வாறு உருவாக்கப்படும்  virtual தொலைகாட்டியின் நிரப்பப்படாத பகுதிகளை நிரப்புவதற்கும் பூமியின் வெவ்வேறு இடங்களில் நிறுவப்பட்டிருக்கும் தொலைகாட்டிகளை இணைப்பதற்கும் algorithm களை உருவாக்கவேண்டும்.இந்த மிகப்பெரிய பொறுப்பை தன் தலையில் சுமந்த
பெண்தான் Katherine Louise Bouman இதற்காக இவர் உருவாக்கிய அல்கோரிதத்தின் பெயர் CHIRP (Continuous High-resolution Image Reconstruction using Patch priors).


உலகத்தின் வெவ்வேறு பிரதேசங்களில் நிறுவப்பட்டுள்ள 8 தொலைகாட்டிகளும் ஒரே நேரத்தில் நிறுத்தப்பட்டு அந்த நேரத்தில் அவ் தொலைகாட்டிகளினால் உள்வாங்கப்பட்ட மின் காந்த அலைகளை கம்பியூட்டரினால் வேர்சுவலாக உருவாக்கப்பட்ட உலகின் அளவை ஒத்த தொலைகாட்டிக்கு இயைபாக்கி கருந்துளையின் படத்தை உருவாக்கவேண்டும்.
2017 ஏப்ரலில் 8 தொலைகாட்டிகளும் ஒரே நேரத்தில் நிறுத்தப்பட்டு மின் தொலைகாட்டிகளில் விழும் மின் காந்த அலைகள் பிரீஸ் செய்யப்பட்டு டேட்டாக்களாக மாற்றப்பட அவை பெற்றாபைற்றிலான டேட்டாக்களை உருவாக்கிதள்ளியது.இவற்றை சேமிக்க 100க்கு மேற்பட்ட ஹார்ட் டிஸ்கள் தேவைப்பட்டன.இவளவு டேட்டாவை பரிமாற இணையத்தால் முடியாததன் காராணமாக ஹார்ட் டிஸ்குகளை கப்பல்,விமானத்தின் மூலம் MIT lab இற்கு பரிமாறப்பட்டன.
200 பேர்கொண்டவிஞ்ஞானிகளின் குழுவின் வருடக்கான உழைப்பே வெற்றிகரமாக கருந்துளையின் படத்தை பிடிப்பதற்கு உதவியது.

கருந்துளையில் இருந்து ஒளி வெளியே செல்லமுடியாது கருந்துளை மின் காந்த அலைகளையும் உறுஞ்சக்கூடியது என்றால் மின் காந்த அலைகளைக்கொண்டு எப்படிEHT தொலைகாட்டி கருந்துளையை படம்பிடித்தது?

இதற்கு பதில்தெரியவேண்டுமென்றால் எமக்கு கருந்துளையின் உருவவியல் தெரியவேண்டும்.

கருந்துளையின் Event Horizon என்ற பகுதிவரையே ஒளியினால் கருந்துளைக்கு அருகில் சென்று மீண்டும் திரும்பிவரமுடியும்.ஏனென்றால் Event Horizon இல்தான் ஒளியின் தப்புவேகம் ஒளியின்வேகத்திற்கு சமனாக காணப்படுகின்றது.

கருதுளையின் இந்த Event Horizon இன் அளவை சுவார்சைல்ட்டின் சமன்பாட்டின்மூலம் கண்டறியமுடியும்.இதைக்கொண்டு கணிக்கும்போது Event Horizon ஆனது கருந்துளையின் r ஆரை தூரத்தில் காணப்படுவதாகவைத்துக்கொள்வோம்.அதாவது r Schwarzschild radius இல் Event Horizon காணப்படும்.இதற்குள் ஒளி சென்றாலும் மீளமுடியாது.

 Event Horizon இற்கு அப்பால் தட்டுருவில் துகள்கள்,தூசுக்கள் மில்லியன் கணக்கான வெப்ப நிலையில் மிகமிகவேகமாக சுழன்றுகொண்டிருக்கும் இது acceration disk என அழைக்கப்படுகின்றது.இந்த டிஸ் வெளிப்புறமாகப்பெரிதாக முடியும் ஆனால் Event Horizon இற்குள் நுழையவேமுடியாது. இது கருந்துளையில் இருந்து 3r Schwarzschild radius தூரத்தில் அதாவது Event Horizon ஐவிட 3 மடங்குதூரத்தில் அமைந்திருக்கின்றது.


கருந்துளையின் 1.5 மடங்கு சுவேர்சைல்ட் ரேடியஸ்ஸில் போட்டோன் களால் ஆன கோளம்(photon sphere) ஒன்று காணப்படுகின்றது,இங்கே ஒளிப்போட்டோன்கள் கோளவடிவில் Event Horizon இற்கு வெளியே கருந்துளையை மையமாக வைத்து சுற்றிக்கொண்டிருக்கும்.


கருந்துளையில் இருந்து ஒளி வெளியே செல்லமுடியாது கருந்துளை மின் காந்த அலைகளையும் உறுஞ்சக்கூடியது என்றால் மின் காந்த அலைகளைக்கொண்டு எப்படிEHT தொலைகாட்டி கருந்துளையை படம்பிடித்தது என்பதற்கான பதிலைத்தான் பார்க்கப்போகின்றோம்

கருந்துளையை மையமாக வைத்து கருந்துளையின் 1.5 மடங்கு சுவேர்சைல்ட் ரேடியஸ்ஸில் போட்டோன் களால் ஆன கோளம் ஒன்று சுற்றிக்கொண்டிருக்கின்றதல்லவா இது ஒரு உறுதியான கோளம் அல்ல எந்த நேரத்திலும் போட்டோன் கள் கருந்துளையினால் விழுங்கப்பட்டுவிடும் அதே நேரம் சில போட்டோன்கள் கருந்துளையில் இருந்து தப்பி வெளியே சென்றுவிடும்.இவ்வாறு வெளியே தப்பிய மின் காந்த அலைகளினால் உருவாக்கப்படும் ரேடியேசன் அதாவது கதிர்ப்பைத்தான் ஸ்டீபன் ஹோக்கிங்க் ஹோக்கிங்க் றேடியேசன்(hawking radiation) எனக்குறிப்பிட்டு கருந்துளை மின் காந்த அலைகளைக்கதிர்க்கக்கூடியது என குறிப்பிட்டார்.

எமக்கு தற்போதுகிடைத்த கருந்துளையின் படத்தில் ஒளிர்ந்துகொண்டிருக்கும் சுற்றுவட்டம் ஒன்று தெரிகின்றதே,கருந்துளைக்கு அருகே சென்று பார்த்தாலும் எமக்கு அது தெரியாது ஏன் தெரியுமா?
முன்பே பார்த்தோம் ஒரு பொருள் எமக்கு தெரியவேண்டுமென்றால் அப்பொருளில் விழும் ஒளி எம் கண்ணை அடையவேண்டும் என்று.

டொப்லர் இபக்ட் என்றால் என்ன என்றும் பார்த்திருந்தோம் அதை இப்போது ஒளிக்கு பயன்படுத்தப்போகின்றோம் .photon sphere இல் இருந்து தப்பிய போட்டோன்கள் உருவாக்கும் ஒளி எம்மால் பார்க்கக்கூடிய ஒளியின் ரேஞ்சிற்குள் இருப்பதாக வைத்துக்கொள்வோம் அதாவது விஸிபிள் ரேஞ்சிற்குள் இருப்பதாக வைத்துக்கொள்ளவேண்டும்.ஆனால் அவ்வொளி எம்மை வந்தடையும் போது கருந்துளையின் மிகப்பெரும் ஈர்ப்புவிசைகாரணமாக அவற்றின் அலை நீளத்தில் மாற்றம் ஏற்பட்டுவிடுகின்றது.

எம்மால் உணரப்படும்(கண்களால்) ஒளி விஸிபிள்(visible) ரேஞ்சிற்குள்தான் அந்த 7 நிறங்களும் உள்ளன.
பாருங்கள் ultraviolet light ற்கும்  infrared ற்கும் இடைப்பட்ட அலை நீள இடைவெளியில்தான் எம்மால் உணரப்படும் 7 நிறங்களைக்கொண்ட ஒளி இருக்கின்றது.இந்த அலை நீளம் அதிகரித்தாலோ குறைந்தாலோ எம்மால் உணரப்படாத அலை நீளப்பகுதிக்கு சென்றுவிடும்.எக்ஸ்ரேயை எல்லாம் எம்மால் பார்க்கமுடியாதல்லவா அதே மாதிரித்தான்.

ஆகவே முன்பு கூறியதின் படி(டொப்லெர்) எம்மை வந்தடையும் அலை நீளம் அதிகரித்திருக்கும்.அந்த அலை நீளம் infraredற்கு மாறிவிடுகின்றது.இதை அவர்கள் red-shifted என்று அழைக்கின்றார்கள். red-shifted எம்மால் உணரப்படும் மின்காந்த அலை நீள வரிசைக்குள் இல்லை எனவே எம்மால் கருந்துளையை வெற்றுக்கண்ணால் பார்க்கமுடியாது.

விஞ்ஞானிகளுக்கு கிடைத்த கருந்துளையின் புகைப்படத்தின் மையத்தில் கறுப்பாக காணப்படும் பகுதி எதைபிரதிபலிக்கின்றது?
கருந்துளையின் மையம்?
Event Horizon?
photon sphere?
accretion disk?

ஒளிக்கற்றையை கருந்துளையை நோக்கி அனுப்பும்போது கருந்துளையை நோக்கி செல்லும் ஒளிக்கற்றையை கருந்துளை உறுஞ்சிவிடும்.Event Horizon இல் விழும் ஒளிக்கற்றையையும் கருந்துளை உறுஞ்சிவிடும்.இதற்கு வெளியே அதாவது 1.5 சுவார்ச்சைல் ரேடியஸ்ஸில் இருக்கும் photon sphere இல் விழும் ஒளிக்கற்றையையும் கருந்துளை உறுஞ்சிவிடும் . 2.6 சுவார்ச்சைல்ட் ரேடியஸ் தூரத்தில் விழுனம் ஒளிக்கற்றையே  கருந்துளையில் இருந்து மீண்டும் வெளியே வரமுடியும்.எனவே 2.6 சுவார்ச்சைல்ட் ரேடியஸ் வரை உறுஞ்சப்படும் அனைத்து ஒளிக்கற்றைகளின் நிழலே அதாவது Event Horizon  இன் 2.6 மடங்கு பெரிதான கறுப்பு நிழல்தான் நாம் அந்தப்படத்தின் மையத்தில் கறுப்பாகப்பார்க்கும் மையம்.


இன்னொரு சுவாரஸ்யமான விடயம்
கருந்துளையை சுற்றியுள்ள சனிக்கிரகத்தின் வளையம்போல் காணப்படும் accretion disk ஒரு தளத்தில் இருந்தாலும் அதை எம்மால் எந்தக்கோணத்தில் இருந்தும் பார்க்கமுடியும்.accretion disk இல் இருந்து வெளிப்படும் ஒளி ஈர்ப்புவிசை காரணமாக வளைவதனால் ஒரே ஒரு வளையம் இருந்தாலும் அதை கருந்துளையின் மேற்பகுதியிலும் கீழ்ப்பகுதியிலும் ஒரே நேரத்தில் அவதானிக்கமுடியும்.அதனால் நாம் கருந்துளையைப்பார்க்கும்போது அதன் மேலும் கீழும் accretion disk தெரியும் இதைத்தான் intrasteller படத்தில் மிக அழகாக காட்டியிருப்பார்கள்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்